Skip to main content

விஜய் தேவராகொண்டா வெளியிட்ட போஸ்டர்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

vijay devarakonda liger movie new poster goes viral

 

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. 

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா நிர்வாணமாக கையில் பூங்கொத்துடன் தோன்றியுள்ளார். மேலும் அந்த பதிவில், "இந்த படம் என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. எனக்கு நடிப்பிலும், மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சவாலான படம். நான் எல்லாவற்றையும் உங்களிடம் தருகிறேன். விரைவில் வருகிறது, லைகர்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் பலரிடம் வரவேற்பை பெற்றாலும் சிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிடலாமா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Next Story

‘ஒரு நொடி’ - டீசரும் ட்ரைலரும் ஒரே நாளில் வெளியீடு 

Published on 12/04/2024 | Edited on 13/04/2024
oru nodi teaser and trailer released

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.  

இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆர்யா இதனை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின்டீசரும் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

இப்படத்தை ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சஷர்ஸ் தயாரிக்கிறது.