vjd

ராம் சரணை வைத்து சுகுமார் இயக்கிய ரங்கஸ்தலம் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து ஒரு வருட இடைவேளைக்கு பிறகு அல்லு அர்ஜூனை நாயகனாக வைத்து புஷ்பா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார் சுகுமார்.

Advertisment

புஷ்பா படம் பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ராஷ்மிகா மந்தானா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ஷூட்டிங் முடங்க, விஜய் சேதுபதியிடம் இப்படத்திற்கு தேதிகள் இல்லாததால் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisment

தற்போதுதான் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் இறுதியில்தான் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டாவை வைத்து சுகுமார் தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில்தான் ஷூட்டிங் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.