vijay devarakonda

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர், விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது பூரி ஜெகன்நாதன்இயக்கத்தில் 'ஃபைடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சார்மி தயாரிக்கிறார்.

Advertisment

விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும்.

தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகரும் அவ்வளவு ஃபாலோவர்களை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சமீபத்தில்தான் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்றிருந்ததை மகிழ்ச்சியுடன் யோகா செய்த புகைப்படத்துடன் தெரிவித்தார்.