அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களின் மூலம் தெலுங்கில் முன்னணி ஸ்டாராகவும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்றவராகவும் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டா, 'நோட்டா' படத்தின் மூலம் நேரடியாக தமிழ்த்திரையுலகில் நுழைந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் விஜயின் அடுத்த படமான 'டியர் காம்ரேட்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ், தெலுங்கு உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வருகிற மே 31ஆம் தேதி வெளிவருகிறது என்ற அறிவிப்புடன் இந்த டீசர் வெளியாகியுள்ளது. பரத் கம்மா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஜஸ்டின் பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். இவரின் 'அடியே அழகே' பாடல் மெகா ஹிட் மெலடி ஆகும்.
'நோட்டா', ஒரு அரசியல் படம். முக்கியமாக தமிழக அரசியல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதனால் அது தெலுங்கில் வெற்றி பெறவில்லை. தமிழிலும் தோல்வியே. 'டியர் காம்ரேட்' தலைப்பும் டீசரும் அது மாணவ அரசியல் பேசும் படம் என்பதை குறிக்கிறது. இந்த அரசியலில் விஜய் தேவரகொண்டா வெற்றி பெறுகிறாரா என்று மே மாதம் தெரிந்துவிடும்.
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Ts59rN-dGSA.jpg?itok=TuUfBmUe","video_url":" Video (Responsive, autoplaying)."]}