Advertisment

“பெரிய வீட்டை வாங்கிவிட்டேன், பயமாக இருக்கிறது”- கோடிகளில் வீட்டை வாங்கி, பயத்தில் விஜய்தேவரகொண்டா!

தெலுங்கு திரைப்பட நடிகரும், தென்னிந்திய படங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவரருமானவர்விஜய் தேவரகொண்டா. இவர் பெல்லி சுப்ளூ படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்திருந்தாலும், அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும், பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

Advertisment

vjd

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் நான்கு மொழிகளில் வெளியானது. இதனை அடுத்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் மற்றும் ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

Advertisment

தற்போது இவர் ஹைதரபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் மிகப்பெரிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த வீட்டின் மதிப்பின் சுமார் 15 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா வீடு வாங்கியது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மிகப்பெரிய வீட்டை வாங்கிவிட்டேன். அது பயமாக இருக்கிறது. தற்போது அந்த பயத்தை போக்க எனது அம்மா தேவைப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

vijaydevarakonda
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe