விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர். முதல் படத்தின் போதே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. கடந்த ஆண்டு இருவரும், சிங்கிள் இல்லை என தெரிவித்தனர். ஆனால் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை அவர்கள் சொல்ல மறுத்துவிட்டனர். இதனால் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது உறுதியானது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த 43வது இந்தியா தின அணிவகுப்பில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். இது அவர்களின் காதலை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் மணமக்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடனும் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தேவரகொண்டா கடைசியாக கிங்டம் படத்தில் நடித்திருந்தார். ராஷ்மிகா கடைசியாக குபேரா படத்தில் நடித்திருந்தார். இப்போது தம்மா, தி கேர்ள்பிரண்ட், மைசா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.