விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். வருகிற 1 ஆம் தேதி பான் இந்தியா படமாக திரைக்கு வரவுள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்தபத்திரிகையாளர்களின் சந்திப்பில் ரஜினி குறித்து விஜய் தேவரகொண்டா பேசியது வைரலாகி வருகிறது. அவர் பேசியது, "சூப்பர் ஸ்டார் வெற்றி தோல்வியை தாண்டியவர். ரஜினி சாருக்கு தொடர்ந்து 6 படங்கள் தோல்வி. ஆனால் ஜெயிலர் படம் மூலம் வெற்றி கொடுத்து ரூ. 500 கோடியை வசூலித்து காட்டியுள்ளார். அதை எல்லாரும் அமைதியாக பார்க்கிறோம். அதேபோல் கமல் சார், சிரஞ்சீவி சார் எல்லாரும் இந்த வயதிலும் நடித்து வெற்றி கொடுக்கிறார்கள்" என்றார்.