"இது கண்டிப்பாக தேசிய அளவில் பரபரப்பாகும்!" - விஜய் தேவரகொண்டா!  

dwdwd

'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் 'லைகர்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது,கையில் பச்சைகுத்தியது உட்பட ரசிகர்களின்கொண்டாட்ட விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், "என் செல்லங்களே, நேற்று என்னை நீங்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டீர்கள். சந்தோஷமான உணர்ச்சிப் பெருக்கு. உங்கள் அன்பு என்னிடம் வந்துசேர்ந்தது. ஒரு காலத்தில் எனது நடிப்பை யாராவது கவனிப்பார்களா, எனது திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்கு வருவார்களா என்று நான் கவலைப்பட்டிருக்கிறேன். நேற்று 'லைகர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத்தான் நாங்கள் வெளியிட்டோம். அதற்கு மாநிலம் முழுவதும் நடந்த கொண்டாட்டம் என்னை நெகிழச் செய்தது. இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். டீஸருக்காகக் காத்திருங்கள். கண்டிப்பாக தேசிய அளவில் பரபரப்பாகும். உங்கள் அனைவருக்கும் என் அன்பு" என்று பதிவிட்டுள்ளார்.

vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe