vjd

Advertisment

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவிவருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாகவும், அதற்கு நன்கொடை செய்யலாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதேபோல அவரது அறக்கட்டளைக்கு சுமார் 70 லட்சம் நன்கொடையும் வந்துள்ளது.உதவிடக்கோரியும் பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதை தொடர்ந்து முதல் கட்டமாக உதவி வேண்டும் என்று கேட்டவர்களுக்கு உதவிடஇருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விஜய் தேவரகொண்டாவின் இந்த செயலை கடுமையாக தாக்கி தனியார் இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டது.

Advertisment

அதற்கு பதிலடி தரும் வகையில் விஜய் தேவரகொண்டா வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய நன்கொடைகளைபற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? இது உழைத்துச் சம்பாதித்த பணம். என்னுடைய விருப்பத்தின் பேரில் அவற்றை நான் வழங்குகிறேன். எங்களுடைய மற்றும் திரைத்துறையின் விளம்பரங்களால்தான் உங்கள் இணையதளங்கள் வாழ்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு நான் நேர்காணல் தர மறுத்ததால் இப்படி எதிர்மறையாக எழுதி வருகிறீர்கள்.

மக்கள் யாரும் இது போன்ற போலிகளை நம்பாமல் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் நேர்மையான ஊடகங்களை நம்புங்கள். இது போன்ற போலிச் செய்திகளைபரப்புபவர்களே,உங்களால் முடிந்தால் மக்களுக்கு உதவுங்கள். என்னைபோலவே பல நடிகர்கள் இதுபோன்ற போலி ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகளால் துயரத்துக்கு ஆளாகின்றனர். இது அவர்களுக்கு ஒரு அன்றாடமாகவே மாறிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.