Advertisment

“ரசிகர்களிடம் கைகொடுத்துவிட்டு பின் டெட்டால் போட்டு கை கழுவுவீங்க”- விஜய்யை கடுமையாக விமர்சித்த சர்ச்சை இயக்குனர்

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கும் பிகில் படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிகில் வருகிற தீபாவளிக்கு வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

director samy

அண்மையில் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் வழக்கம்போல அரசியல், பாட்டு அறிவுரை என்று தனது ரசிகர்களிடம் உரையாடினார். யார் யாரை எங்கு வைக்கணுமோ அங்கே வைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

Advertisment

இந்நிலையில் இந்த பேச்சு ஓய்ந்துமுடிந்து பிறகு இயக்குனர் சாமி விஜய்யின் மேடை பேச்சை விமர்சித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நாம் 4 முறைதான் சந்தித்துள்ளோம். 3 முறை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். 2000ஆம் ஆண்டில் உங்களை நேரடியாக சந்தித்து ‘அன்றில் பறவைகள்’ என்ற குடும்ப பாங்கான கதையைக் கூறினேன்.

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="eaa1ad2a-832c-4cb4-a66d-cd5918407c08" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_72.jpg" />

பிரியமானவளே பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக 2 மணி நேரம் ஒதுக்கி கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்சனை இல்லை.

நீங்கள் ரஜினிகாந்த் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்க. வாய் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் சினிமாத்துறை தாண்டி எந்த அளவில் நல்லவர் என்பது தெரியும். ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதை டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்தேன்.

alt="sss" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5579ecac-0812-47b3-8040-337e896cb662" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_68.jpg" />

நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை இருக்கிறது. மேடையில் மட்டும் ஏன் பொய்யாக பேசுகிறீர்கள். எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும்.

தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போகவும். வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க. ஒரு நாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe