கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், கரோனா நிவாரணப் பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Advertisment

ghr

இதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரளா முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர் நிவரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் வேலையில்லாமல் கஷ்டப்படும் ஃபெப்சியின் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது தவிர, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகர்களின் கணக்குகளிலும் நடிகர் விஜய் தனித்தனியாகப் பணம் செலுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் தங்களது சொந்தப் பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் பொருளுதவிகள் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடிகர் விஜய் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்களின் கணக்குகளில் தலைக்கு ரூ.5000 வீதம் பணம் செலுத்தி வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment