பிகில் படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

Advertisment

vijay thalapathy

இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு, தற்போது கர்நாடகாவிலுள்ள சிமோகா மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் சிறப்பு அனுமதி பெற்று ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

டிசம்பர் 1 முதல் ஜனவரி 18 வரை இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. கடந்த வாரமே இந்தப் ஷூட்டிங்கிற்காக, சிறையின் முகப்புக்கு புதிய வண்ணத்தை பூசியுள்ளது படப்பிடிப்புக் குழு. கடந்த நான்கு நாட்களாக விஜய் இந்த ஷூட்டில் கலந்துகொண்டுள்ளார். இன்னும் ஐந்து நாட்களில் விஜய் சேதுபதியும் படக்குழுவுடன் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

தற்போது சிறையில் கைதிகளுடன் விஜய் நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகளை படமெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment