Vijay Consultation with vijay makkal iyakkam district executives

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது. இதனிடையே பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' என்ற இரவு பாடசாலை திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இலவச சட்ட ஆலோசனை மையம் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில், ‘தளபதி விஜய் நூலகம்’ என்ற பெயரில் நூலகம் திறக்கப்பட்டது. பின்பு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மளிகை பொருட்களும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தின. தொடர்ந்து தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்களும் நிதியுதவியும் வழங்கினர். நெல்லையில் நடந்த இந்த நிகழ்வில், விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்.

Advertisment

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கஅலுவலகத்தில் மாவட்டத்தலைவர்களுடன்ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.