கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும்இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய்.

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப்பல இடங்களில்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பானவீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor vijay Kerala The Greatest of All Time venkat prabhu
இதையும் படியுங்கள்
Subscribe