Advertisment

தவறு செய்தவர்களை விட்டுவிட்டு தண்டனையை வேறொருவருக்கு கொடுப்பதா..? விஜய் கொதிப்பு!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த விழாவில் விஜய் உள்ளிட்டபடக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பேனர் விழுந்த சம்பவத்தால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொண்ட விஜய், இது போன்ற சமூகப் பிரச்சினைகளை ஹேஷ்டேக் போடுங்கள் என்றும் சமூகப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்றும் தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்து பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்

Advertisment

sdg

மேலும் சுபஸ்ரீ விஷயத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல், பிரின்டிங் பிரஸ் வைத்து இருப்பவரை கைது செய்துள்ளார்கள் என்று காவல் துறையையும்,தமிழக அரசையும்மறைமுகமான சாடினார்.சுபஸ்ரீ விஷயம் குறித்து பெரிய நடிகர்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் நிலையில் விஜய் தைரியமாக இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சின் எதிரொலியாகதமிழக அமைச்சர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe