நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான அரபிக்குத்துமற்றும் ஜாலியோ ஜிமிக்கானாபாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம்ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் 'பீஸ்ட்' படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமம்ரூ. 32 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.