vijay beast climax scene troll social media

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. பீஸ்ட் படத்தில் ரா உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் விஜய் இந்த காட்சியில் ஜெட் விமானத்தில் பாகிஸ்தானுக்குசென்று தீவிரவாதி தலைவனைப்பிடித்து வருவார். அப்போது விஜய் ஹெல்மெட் அணியாமல் ஜெட் விமானத்தை ஓட்டிவருவது போன்றும், மற்றொருவிமானத்தில் வரும் விமானிக்கு கை காட்டுவது போன்றும்அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை தான்ஓய்வு பெற்ற இந்திய விமானப்படைவிமானி சிவராமன் சஜ்ஜன்சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைதொடர்ந்துஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பொதுவாக ஜெட் விமானம் மணிக்கு 1,500 கி.மீ வேகத்தில் செல்லும். அந்த வேகத்தில் செல்லும் போது எதிரே வரும் ஜெட் விமானம் மைக்ரோ செக்கென்டில் கடந்து விடும். அப்படி இருக்கையில் எதிரே வரும்விமானிக்கு விஜய் எப்படி சல்யூட் அடிக்க முடியும் என்றும், ஜெட் விமானத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் என்னவாகும்என்றும் கேள்வி எழுப்பி வந்தன. இதற்கு விஜய் ரசிகர்கள் ஏற்கனவே வெளியான படங்களின் காட்சிகளைசுட்டிக்காட்டி பதிலடி கொடுத்து வந்தன.

இந்நிலையில் காப்புரிமை காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் இந்த வீடியோவை நீக்கியதாக கூறப்படுகிறது.இதனைதொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் படம் தொடர்பான விவாதங்கள் குறைந்து ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.

Advertisment