அடுத்தடுத்த பாலியல் புகார்; சங்கத்தில் இருந்து பிரபல நடிகர் நீக்கம்

vijay babu resigns amma executive committee

மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் விஜய் பாபு. இவர்மீது கோழிக்கோட்டை சேர்ந்த நடிகை ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிதன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைதொடர்ந்து இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு விஜய் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையில் விஜய் பாபு தன் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையின் பெயரை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் வெளியிட்டதால் விஜய் பாபுவின் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் பாபு மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின்(AMMA) செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்விஜய் பாபுவை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கிமலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது

Actress malayalam
இதையும் படியுங்கள்
Subscribe