sasikumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தனது மைத்துனர் அசோக்குமார் தற்கொலைக்குப் பிறகு சொந்த படம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் நடிகர் சசிகுமார் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர்சில மாதங்களுக்கு முன்பு பாகுபலி டைரக்டர் ராஜமவுலி ஐதராபாத்தில் சந்தித்தார். ராஜமவுலி இப்போது தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தில் சசிகுமார் நடிக்க வைக்கத்தான் இந்த சந்திப்பு என்றார்கள். ஆனால் சசிகுமாரோ வரலாற்றுப் படம் ஒன்றை டைரக்ட் பண்ணுவதற்காக சில ஆலோசனைகளை ராஜமௌலியிடம் பெற தான் சந்தித்துள்ளதாக தகவல் வெளியானது. மிக பிரம்மாண்டமான அந்த படத்தை தயாரிக்க பெரிய நிறுவனம் ஒன்றிடம் பேசி முடித்துள்ளார் சசிகுமார். அந்த கதையின் வரலாற்று நாயகனாக விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர்களிடம் விஷயத்தை விஜய் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுள்ளார் சசிகுமார். ஆனால் விஜய் என்ன நினைத்தாரோ சசிகுமாரை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இப்போது அந்த கதையை சூர்யா ஓகே பண்ணி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.