Published on 14/11/2018 | Edited on 14/11/2018

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான விஜய்யின் 'சர்கார்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை மீண்டும் அட்லி இயக்கவுள்ளதாகவும், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்திற்கு 'ஆளப்போறான் தமிழன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தமே இல்லாமல் இன்று எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஜய் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில் நயன்தாரா அல்லது சமந்தா நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.