style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை மீண்டும் அட்லி இயக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்பட்டத்தின் படப்பிடிப்பு வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. மேலும் மெர்சல் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்ற இருப்பதாகவும், இந்த படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பும் வைக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.