தமிழ் திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் - பிரியங்கா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவர்களது திருமணம் இன்று காலை நடைபெறுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஜஸ்வந்த் கண்ணன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனராக 'சர்கார்' திரைப்படத்தில் பணிபுரிந்தவர். 'சர்கார்' படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தும் உள்ளார். பொறியியல் கல்வி முடித்து விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய ஜஸ்வந்த், தனது சினிமா ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு, இயக்குனர் முருகதாஸிடம் பணிபுரிய முயற்சி செய்தார். முதலில் 'மான் கராத்தே' படத்தில் இயக்குனர் திருமுருகனுடன் பணியாற்றிய இவருக்கு பின்னர் முருகதாஸுடன் 'சர்கார்' படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தன் தோழியான பிரியங்காவை திருமணம் செய்கிறார் ஜஸ்வந்த். நேற்று (01-12-2018) மாலை நடந்த இவர்களின் திருமண வரவேற்புக்கு நடிகர் விஜய் வருகை தந்து வாழ்த்தினார். இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடிகைகள் மீனா, தேவயானி உள்ளிட்டோரும் மூத்த நடிகைகள் சச்சு, ஜெயசித்ரா உட்பட பலரும் திரைத்துறையில் இருந்து கலந்துகொண்டனர். 'நக்கீரன்' ஆசிரியர் நக்கீரன் கோபால் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தினார். எஸ்.வீ.சேகர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நக்கீரன் இணையதளத்தில், தன் வாழ்க்கை பயண தொடரான 'திரையிடாத நினைவுகள்' தொடரில் தன் புதல்வர்கள் குறித்து அவர் பகிர்ந்த கட்டுரை இதோ...
என் மகனை சேர்த்துக்கொள்ள மறுத்த மணிரத்னம்! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #11