Skip to main content

மகேஷ் பாபுவின் சாதனையை முறியடித்த விஜய்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Vijay arabic kuthu song breaks Mahesh Babu's kalaavathi song record

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இப்பாடல் வெளியான 17 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வரி பாட்ட' படத்தின் முதல் பாடலான "கலாவதி.." பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்த நிலையில் தற்போது விஜய்யின் 'அரபிக் குத்து' பாடல் அசால்ட்டாக அந்த சாதனையை முறியடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்