நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல சிறப்பான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர். இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று ப்ளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. தற்போது விஜய் ஆண்டனி லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டம் கடந்த சில மாதங்கள் முன்பு வெளியாகி பாராட்டுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.