vijay antony wife about his daughter meera passed away

Advertisment

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் மீரா (16) கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போது அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு, சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவரது மறைவுதிரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகளின் மறைவு குறித்து கடந்த மதம் 21 ஆம் தேதி விஜய் ஆண்டனி பகிர்ந்த எக்ஸ் பதிவில், "என் மகள் மீரா மிகவும் அன்பானவள்; தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விடச் சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள்; என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்; அவளுடன் நானும் இறந்துவிட்டேன்; நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்; அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ரத்தம் படம் கடந்த 6 ஆம் தேதி வெளியான நிலையில், அதன் ப்ரோமோஷனுக்காக வந்திருந்த விஜய் ஆண்டனி தனது இரண்டாவது மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் மீராவின் மறைவு குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி தற்போது அவரது எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நீ 16 வருடங்கள் மட்டும் தான் வாழ்வாய் என எனக்கு தெரிந்திருந்தால் எனக்கு மிக அருகில் உன்னை வைத்திருப்பேன். சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன்.

Advertisment

உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியவில்லை. அப்பா அம்மாவிடம் திரும்பி வந்து விடு. லாரா உனக்காக காத்திருக்கிறாள். லவ் யூ தங்கம்" எனக் குறிப்பிட்டு மீராவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.