Advertisment

"உலகத்தையே அழிச்சுட்டா நல்லா இருக்கும்" - விரக்தியில் விஜய் ஆண்டனி

vijay antony tweet goes viral

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ கோடியில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இப்படங்களின் வெற்றியை தொடர்ந்துஇயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படம்கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகிவருகிறது.

Advertisment

இதனிடையேஇந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி கரோனாபரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,"கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் நம்மைபோல விஜய் ஆண்டனியும் விரக்தியில் இருக்கிறார் போல என பலரும் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

corona mazhai pidikatha manithan vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe