Vijay Antony suffers an accident on the set of Pichaikaran 2 - Hospitalized

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகராகவும், தயாரிப்பாளராகவும்இயக்குநராகவும் களமிறங்கிய விஜய் ஆண்டனி சினிமாவின் மற்ற தொழில்நுட்ப விசயங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.

Advertisment

ஒரு சில படங்களில் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருக்கும்அவர் நடித்து முடித்த படங்களான தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என வரிசையாக வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.

Advertisment

இது ஒரு புறம் இருக்க,பிச்சைக்காரன் 2 படத்தைத்தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவிற்கு படக்குழு சென்றிருந்தது. சண்டைக்காட்சியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார். இதனையடுத்து அவர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நலம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.