/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ant.jpg)
விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் ரத்தம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கஇன்பினிடிவ் பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில்'ரத்தம்' படத்தில்மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி,மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும்ரம்யா நம்பீசன் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக கூறியுள்ளது. மேலும்ரத்தம் படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து கோடையில் படத்தை வெளியிட படக்குழுதிட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)