"நான் நல்லவனா, கெட்டவனா?" - குழப்பத்தில் விஜய் ஆண்டனி

 vijay antony starring ratham movie tittle goes viral

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைஇப்படத்தை தயாரிக்கும் இன்பினிடிவ் பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, இப்படத்தின் டைட்டில் போஸ்டரைபடக்குழு நேற்று(23.1.2022) வெளியிட்டிருந்தது. அதன்படி, படத்திற்கு 'ரத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இயக்குநர்சி.எஸ் அமுதனிடம் 'இந்தப் படத்துல நான் நல்லவனா, கெட்டவனா?' எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படத்தின் டைட்டில் போஸ்டருடன் விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vijay antony
இதையும் படியுங்கள்
Subscribe