vijay antony

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் வள்ளி மயில். 80-களில் புகழ் பெற்ற ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிவரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ”இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

Advertisment