vijay antony speech in raththam  press meet

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தம்' . இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படம் நேற்று(28 ஆம் தேதி) வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி, அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

Advertisment

இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி தனது இரண்டாவது மகள் லாராவுடன் கலந்து கொண்டார். கடந்த 19 ஆம் தேதி விஜய் ஆண்டனியின் முதல் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "அமுதன் என்னுடைய நண்பன். அவருடைய அப்பா எனக்கு மியூசிக் சொல்லித் தர ரொம்ப கஷ்டப்பட்டார். மியூசிக் தெரியாம மியூசிக் பண்ண ஆரம்பிச்சேன். அது அவருக்கு தெரியும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு கத்துக் கொடுக்க நிறைய முயற்சிகள் செய்தார்.

அமுதனுடைய காமெடி படங்கள் எல்லாரும் பாத்திருக்கோம். ஆனால் ரிலீஸாகாத அவருடைய இரண்டாவது படத்தில் ஒரு சிறிய காட்சியை பார்த்திருக்கிறேன். ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஹீரோவை வைத்து ஒரு காட்சியை எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இயக்குநர் அமுதன் மீது எப்போதும் எனக்கு ஒரு மரியாதை உண்டு. ரொம்ப நாளாக அவருடன் பணியாற்ற வேண்டும் என்று நினைத்து ஒருவழியாக 10 வருடம் கழித்து வாய்ப்பு கிடைத்துள்ளது.

இசை ஞானத்தோடு இசையமைக்கிற இசையமைப்பாளர்கள் குறைவு தான். அப்படி ஒருவர் தான் இசையமைப்பாளர் கண்ணன். இந்த படத்தில் அருமையாக இசை அமைத்திருக்கிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.