'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பீ' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அருள்தேவ். இவர் தற்போது சுயாதீன பாடல் ஒன்றுக்கு இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார். மரகதமணி, வித்யாசாகர், மிக்கி ஜே மேயர் என பல இசையமைப்பாளர்களின் ஃபேவரிட் கீ-போர்ட் பிளேயர், ப்ரோக்ராமர் இவர். பாகுபலி-2, நடிகையர் திலகம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் சினேகா என்பவர் இந்த பாடலில் பாடியிருக்கிறார்.
‘DPயா உன்ன வச்சு, பீ...பீ...பீ... மேளமடிச்சு, statusa மாத்தணுமே...' என சிங்கிள்ஸின் வாட்டத்தையும் 'ஆயிரம் ஆப்ஷன் எனக்கிருக்கு எனக்கெதுக்கிந்த அரை கிறுக்கு, காதல் எல்லாம் outdated இப்ப நாங்கதான்டா updated' என நியூ வேவ் கேர்ள்ஸின் மன ஓட்டத்தையும் ஜாலியாக காலி செய்திருக்கிறார் பாடலாசிரியர் வசந்த்.
இந்த பாடலை இன்று மாலை ஆறு மணிக்கு திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.