/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/152_17.jpg)
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத்தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார்.
இப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதில் படத்தின் முதல் 3.45 நிமிட வீடியோ இடம்பெற்றிருந்த நிலையில், மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்துபேசப்பட்டிருந்தது. பின்பு கடந்த 14 ஆம் தேதி (14.04.2023) இப்படம் வெளியாவதாக படக்குழு அறிவித்தது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படக்குழு ஏற்கனவே குறிப்பிட்டது போல் துபாயில் இருக்கும் ஒரு பெரிய பிச்சைக்காரர் பற்றி ட்ரைலரின் ஆரம்பத்தில் கூறுகிறார்கள். விஜய் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி இந்தியாவின் 7வது பணக்காரர் என வில்லன் ஒருவரிடம் கூறுகிறார். தொடர்ந்து விஜய் ஆண்டனி கதாபாத்திரம் குறித்து காட்சிகள் வருகிறது.
பின்பு அவர் பயணிக்கும் விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அதில் அவர்இறந்தது போலக் காண்பிக்கின்றனர். ஆனால், விஜய் ஆண்டனி மீண்டும் உயிருடன் புது கெட்டப்புடன் தோன்றுகிறார். அந்த கொலை வழக்கின் பின்னணி குறித்து விரிவாக இப்படம் பேசியிருப்பது போல் ட்ரைலரை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. இப்படம்வருகிற மே 19 ஆம் தேதி (19.05.2023) திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)