vijay antony Pichaikkaran 2 ott release update

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. அங்கு வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி இசையமைத்து அதில் நடித்தும் இருந்தார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யாசகர்களுக்கு பல்வேறு உதவிகளைச்செய்தார். திருப்பதிக்குச் சென்று அங்குள்ள யாசகர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். அடுத்து, ஆந்திராவின் ராஜமுந்திரியில் சாலையோரம் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை, ஸ்டார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவர் கையாலே பரிமாறி விருந்து வழங்கினார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 18 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான போஸ்டரை பகிர்ந்துள்ளது. மேலும் விஜய் ஆண்டனியும் அந்த போஸ்டரை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.