Advertisment

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விஜய் ஆண்டனி

vijay antony next movie update out now

Advertisment

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படம்கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகிவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c7e099ae-2d01-43d8-9a2b-4ae7ff206a9d" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_56.jpg" />

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி அடுத்ததாகசிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம்’ படத்தைஇயக்கிய சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இன்ஃபினிட்டிவ் ஃபிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (25.11.2021) தொடங்கியது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

mazhai pidikatha manithan vijay antony
இதையும் படியுங்கள்
Subscribe