/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/109_7.jpg)
விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் கைவசம், 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', பாலாஜி குமார் இயக்கத்தில் ஒரு படம், விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம் எனப் பல படங்கள் உள்ளன.
இந்த நிலையில், பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திற்கு ‘கொலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் இப்படத்தைஇன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படம் தொடர்பான கூடுதல் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)