/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/335_9.jpg)
விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோபடத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அக்னி சிறகுகள், ஹிட்லர், காக்கி, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் எனப் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை பிடிக்காத மனிதன் படம் விரைவில் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்க கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார்.
'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முன்னதாக இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் நீண்ட காலமாகி எந்த அப்டேட்டும் வராத நிலையில் இப்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் மே 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரிலீஸ் தேதிகுறித்த அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)