style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டி.டி ராஜா தயாரிக்கும் புதிய படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் இவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் டி.டி ராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும். உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதர நடிகை, நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்ட்ரூ லூயிஸின் 'கொலைகாரன்', நவீனின் 'அக்னி சிறகுகள்', பாபு யோகேஷ்வரனின் 'தமிழரசன்', உள்ளிட்ட படங்களை அடுத்து மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் இப்படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.