Advertisment

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படத்தின் அப்டேட்

vijay antony in hitler movie first look update

Advertisment

செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் தனா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹிட்லர்'. கதாநாயகியாக ரியா சுமன் நடிக்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில்உருவாகும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe