Skip to main content

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ஆண்டனி உதவி?

 

Vijay Antony help for cancer patients

 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் 12 நாளில் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கிலும் வெளியான இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி இசையமைத்து அதில் நடித்தும் உள்ளார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யாசகர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். அண்மையில் திருப்பதிக்குச் சென்று அங்குள்ள யாசகர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். அடுத்து, ஆந்திராவின் ராஜமுந்திரியில் சாலையோரம் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை, ஸ்டார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவர் கையாலே பரிமாறி விருந்து வழங்கினார். 

 

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஜி.எஸ்.எஸ் மருத்துவமனையில், புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்யுமாறு விஜய் ஆண்டனி சொல்லியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.