vijay antony in ga ga na maargan ready to release

Advertisment

விஜய் ஆண்டனி நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. கடைசியாக ஹிட்லர் படம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். லியோ ஜான் பால் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை என பல்வேறு படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ‘ககன மார்கன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைக்கவும் செய்கிறார்.

மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள் மற்றும் தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.