vijay antony dubbing start ratham film

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும்ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்க இன்பினிடிவ் பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

'ரத்தம்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்திற்க்குடப்பிங் பேசும் பணியைஇன்று தொடங்கியுள்ளார்.இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து கோடையில் படத்தை வெளியிட படக்குழுதிட்டமிட்டுள்ளது.

Advertisment