Advertisment

பூஜையோடு படப்பிடிப்பை தொடங்கிய விஜய் ஆண்டனி படக்குழு

Vijay Antony crew started shooting with Pooja

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கடைசியாக இவர் நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் வெளியானது. தொடர்ந்து 'அக்னிக் சிறகுகள்', 'ரத்தம்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘வள்ளி மயில்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை டி.என். தாய் சரவணன் தயாரிக்கிறார். கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஃபரிதா அப்துல்லா நடிக்க பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 80-களில் நடக்கும் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பை பூஜையோடு இன்று படக்குழு தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. திண்டுக்கல்லில் நடந்த இந்த பூஜை நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படுகின்ற இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

Valli Mayil movie director suseenthiran vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe