vijay antony

தமிழ் சினிமாவில் முதல் முழுநீள ஸ்பூஃப் படம் (தமிழ் படம்) எடுத்து இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். 'தமிழ் படம் 2' வெற்றியைத்தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து 'ரத்தம்' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. இப்படத்தினுடைய படப்பிடிப்பு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஹவ்ரா பாலத்தில் நடைபெற்று வந்தது.

Advertisment

தற்போது மீதமுள்ள படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் விரைவில் படக்குழு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார். மேலும்அப்பதிவில் "விஜய் ஆன்டனி வரும் காட்சியை கொல்கத்தாவில் உள்ள ஹவ்ரா பாலத்தில் முடித்துள்ளோம். நன்றி நண்பா. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளோம், ஸ்பெயினில் வரும் காட்சிகளை விரைவில் முடிக்க இருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இப்படத்தில் மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசையமைக்கிறார். கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் போஹ்ரா மற்றும் எஸ் விக்ரம் குமார் ஆகியோர் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் என்ற பேனரில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.