'நான் உங்களை தூரத்திலிருந்து கவனித்து வருகிறேன்' - விஜய் ஆண்டனி புகழாரம் 

ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள "மாளிகை'' படத்தை தில்.சத்யா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது....

vijay antony

"நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்த படத்தின் கதை ரொம்பவே வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய வாய்ஸ்க்கு நான் மிக பெரிய ரசிகன். பாடுவதை ஆண்ட்ரியா நிறுத்தக்கூடாது. நீங்கள் தேர்ந்தடுக்கும் கதாபத்திரங்கள் வித்தியாசமாக உள்ளது என பல பேர் சொல்கிறார்கள். அது உண்மைதான். நானும் உங்களை தூரத்திலிருந்து கவனித்து வருகிறேன். இந்தப்படத்திலும் நீங்கள் கலக்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.

vijay antony andrea maaligai
இதையும் படியுங்கள்
Subscribe