விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன்; இழுபறிக்கு பிறகு ரிலீஸை அறிவித்த படக்குழு 

vijay antony and ramya nambeesan starring tamilarasan movie release date announced

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துவருகிறார்.கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகி வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7e9ddfbd-ac29-49d8-b75e-acd76120cae3" height="272" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_53.jpg" width="453" />

இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் பாபு யோகேஸ்வரன்இயக்கியுள்ள 'தமிழரசன்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். யோகி பாபுசோனு சூட், கஸ்தூரிசங்கர் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, எஸ்.என்.எஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்தபடக்குழு கரோனாபரவலால் படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர்மாதத்திற்கு தள்ளிவைத்து. ஆனால் சில பிரச்சனைகளால் அக்டோபர்மாதம்தமிழரசன் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'தமிழரசன்' திரைப்படம் இந்த (டிசம்பர்) மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.

ramya nambeesan vijay antony tamizharan
இதையும் படியுங்கள்
Subscribe