Hansika Motwani

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘காக்கி’, ‘அக்னி சிறகுகள்’, சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ஒரு படம், விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் திட்டத்திலும் உள்ளார். சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகவுள்ள படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பை டையூ மற்றும் டாமன் பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment