Advertisment

“ஓட்டு தான் நம் வலிமையான ஆயுதம்” - விஜய் ஆண்டனி

vijay antony about election 2024

Advertisment

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது.

இதனால் படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி குறித்த ஆலோசனையும், ரோமியோ படம் தொடர்பாகவும் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, தேர்தல் குறித்தான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “எல்லாரும் ஓட்டு போடுங்க. ஓட்டு போடாம இருக்காதீங்க. நோட்டாவிற்கு போடாதீங்க. பெஸ்ட்-னு யாராவது இருப்பது போல வேஸ்ட்-னும் யாராவது இருப்பாங்க. அதில் யாராவையாவது தேர்ந்தெடுங்க.ஓட்டை வீணடித்து விடாதீங்க. ஓட்டு தான் நம் கைகளில் இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். அதை மிஸ் பண்ணிட்டு குறை சொல்லக் கூடாது.

Advertisment

ஓட்டு போடுவதற்கு முன்னாடி யாருக்கு வாக்களிக்க வேண்டும், அவர் என்ன பண்ணார் என யோசித்து ஓட்டு போடுங்கள். அரை மணி நேரமாவது யோசியுங்கள். பாதி பேர் நேரா போய் குத்திட்டு வந்துடுறாங்க. பிடித்தவங்களுக்கு ஓட்டு போடுறாங்க. அப்பாவாக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும், நாட்டுக்கு என்ன பண்ணாங்க, நல்லது பண்ண அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு என யோசிங்க” என்றார்.

vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe