தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று துவங்கப்பட்டது. கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, "எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இப்போது தங்கள் வளாகத்தில் நல்ல, சத்தான காலை உணவைப் பெறுவார்கள். தமிழகம் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிக்கலாம். அருமையான திட்டம். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி" என எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.