Advertisment

“2026 எலெக்‌ஷன்...” - விஜய்யின் பிளானை போட்டுடைத்த மமிதா பைஜு

vijay answered whether jana nayagan will be a last film question

விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விஜய்யின் பிறந்தநாளான நேற்று படத்தின் கிளிம்ஸ் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. கிளிம்ஸில் விஜய் போலீஸ் அதிகாரியாக கையில் கத்தியுடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisment

சினிமாவை தவிர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், முழு நேர அரசியலுக்கு முன் தனது 69வது படம் தான் கடைசிப் படமாக இருக்கும் என அறிவித்தார். அதன்படி 69வது படமாக உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படம் விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படும் நிலையில் படத்திற்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஜன நாயகன் படம் கடைசிப் படமா இல்லையா என்பதை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் முடிவு செய்யும் என விஜய் கூறியுள்ளதாக படத்தில் நடித்த மமிதா பைஜூ கூறியுள்ளார்.

அயர்லாந்தில் நடந்த கேரள கார்னிவல் நிகழ்வில் மமிதா பைஜூவும் விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நாள் நானும் விஜய் சாரும் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் ஜன நாயகன் படம் தான் உங்களது கடைசி படமா எனக் கேட்டேன். அதற்கு அவர் 2026 எலெக்‌ஷனை பொறுத்துதான். என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என கேஷுவலாக பதிலளித்தார். கடைசி நாள் ஷூட்டிங்கில் நான் ரொம்ப எமோஷ்னலாகிட்டேன். நான் மட்டுமல்ல ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே எமோஷ்னலாகிட்டாங்க. விஜய் சாரும் கூட எமோஷ்னலாகிட்டார். போட்டோவுக்கு கூட அவரால் போஸ் கொடுக்க முடியவில்லை” என்றார்.

actor vijay Jana Nayagan Mamitha Baiju
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe